1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (07:10 IST)

தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர் தேர்வு: விண்ணப்பம் செய்யும் தேதி அறிவிப்பு..!

1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்  இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் நாளை முதல் அதாவது பிப்ரவரி 14 முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

பிப்ரவரி 14 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும்  www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இடைநிலை ஆசிரியர் பணி  தேர்வு  எழுதுபவர்களுக்கு  தமிழ் தகுதி கட்டாயமாக்கப்படும் என்றும்  50 மதிப்பெண் கொண்ட 30 கேள்விகளுக்கு 30 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த தமிழ் தகுதி தேர்வில் 20 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த சுற்று தேர்வு எழுத முடியும்.  

10 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில்  விண்ணப்பதாரர்கள் ஆர்வத்துடன் இந்த பணிக்கு விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Siva