திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (15:07 IST)

ஓபிஎஸ்ஸிடம் கேள்விகள் கேட்க அப்போலோ எதிர்ப்பு - பின்னணி என்ன?

ஓபிஎஸ்ஸிடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்க அப்போலோ மருத்துவமனை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகினார். அப்போது தனது முதல் நாள் வாக்குமூலத்தில், ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் தவிர வேறு நோய் எதுவும் இருந்ததா என்பது பற்றி எனக்கு தெரியாது. 2016 செப்டம்பர் 22-ல் ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாது. ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற எந்த விபரமும் தெரியாது என தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் ஓபிஎஸ்ஸிடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்க அப்போலோ மருத்துவமனை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆம், விசாரணயின் போது ஓபிஎஸ்ஸிடம் மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்கும் போது, மருத்துவர்கள் உடன் இருக்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இல்லையெனில் அவரிடம் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான கேள்விகளை கேட்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.