வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (16:36 IST)

அரசியல் கட்சி தொடங்கினார் விஜய்..!. தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டம்..!!

vijay makkal
டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் தனது கட்சியை பதிவு செய்ததையடுத்து கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது.
 
இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடி வருகின்றனர். கோவையிலும் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், இயக்க கொடியுடன் கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
celebration
குறிச்சி பகுதியில் கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

 
இந்நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் விக்கி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.  இதே போல் கோவையில் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.