வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (07:51 IST)

இரண்டாவது நாள் வாக்கு எண்ணிக்கை: திமுக தொடர்ந்து முன்னிலை!

தமிழக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் இரண்டாம் நாளான இன்றும் திமுக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற்றது. தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்றைய நிலவரப்படி திமுக மற்றும் அதிமுக பல இடங்களில் முன்னணியில் இருந்தன.

இந்நிலையில் இரண்டாவது நாள் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஊராட்சி ஒன்றியங்களில் திமுக 1981 இடங்களிலும், அதிமுக 1800 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் திமுக 244 இடங்களிலும், அதிமுக 225 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இதுதவிர ஒன்றிய ஒடங்களில் அமமுக 66 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றியை ஈட்டியுள்ளது.