தொடர்புடைய செய்திகள்
- ஒரு முன்னாள் அமைச்சரை இப்படியா கை ஆள்வது? ஆர்.பி உதயகுமார் ஆதங்கம்!
- அதிமுகவில் இருந்து திமுக விற்கு வந்த ஒன்றிய பெருந்தலைவரால் தொடரும் சர்ச்சை ?
- ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி-ஐ குறைக்கவும் - ஓபிஎஸ் கடிதம்!
- ரெய்டு நடந்த எக்ஸ் அமைச்சர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் தடாலடி!
- தங்கமணி வீட்டில் கைப்பற்றிய பொருட்கள் என்னென்ன? லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல்!
என்னால் விலகி இருக்க முடியவில்லை தலைவா…. எம் ஜி ஆர் புகைப்படத்தோடு போஸ்டர் ஒட்டிய அன்வர் ராஜா
சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
செவ்வாய்க் கிழமை இரவு பத்தே முக்கால் அளவில் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி, அ. அன்வர்ராஜா சிறுபான்மையினர் நலப் பிரிவின் செயலர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இவர் சசிகலாவுக்கு ஆதரவாக கருத்துகளை பேசி வந்ததாலேயே நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது அன்வர் ராஜா ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் தலைவா... கட்சியில் இருந்து என்னால் விலகியிருக்க முடியவில்லை. ஏனெனில் நான் தினமும் உன்னை நினைக்கிறேன். அதில் நான் என்னை மறக்கிறேன் -தங்கள் நினைவில் வாழும் அ. அன்வர் ராஜா என எழுதப்பட்டுள்ளது.
