செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:27 IST)

ரெய்டு நடந்த எக்ஸ் அமைச்சர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் தடாலடி!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல். 

 
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனைக்கு உள்ளாகும் ஐந்தாவது அமைச்சர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், கேசி வீரமணி மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது சிக்கிய ஆவணங்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.