தொடர்புடைய செய்திகள்
- காதலிக்க மறுத்த தோழியை வெட்டிக் கொன்ற நபர் கைது!
- மருத்துவமனைக்குள் புகுந்து இளைஞர் வெட்டிக் கொலை: 4 பேர் கைது
- தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை: கோவை மேயர் அறிவிப்பு
- சந்தேகத்திற்கு இடமாக சாலை ஓரம் இருந்த 12 கார்கள்: கோவையில் மீண்டும் பரபரப்பு!
- கோவை கார் சிலிண்டர் வெடி விபத்து! – தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதல்வர் பரிந்துரை!
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு; முபினின் உறவினர் கைது!
கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் இறந்த முபினின் உறவினர் ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலியான நபரின் வீட்டிலிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வரும் நிலையில் தேசிய புலனாய்வு முகமையும் இது தொடர்பாக ஆவணங்களை திரட்டி வருகிறது. இந்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கார் வெடித்ததில் இறந்த முபினின் உறவினர் அஃப்சர் கான் என்பவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கார் வெடி விபத்தை தொடர்ந்து கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Edited By Prasanth.K
