ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 27 அக்டோபர் 2022 (08:22 IST)

தொடர் மழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு!

school
சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் சென்னை உள்பட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் மாவட்டத்தில் மழை நீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார் 
 
இருப்பினும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் என்று வழக்கம் போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்து வேறு சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva