1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Another one ADMK celebrity joins DMK

பதவியை பறித்த அதிமுக; திமுகவில் இணையும் பிரமுகர்! – தமிழக அரசியல் பரபரப்பு!

Tamilnadu
அதிமுக முன்னாள் எம்.பியின் கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவர் திமுகவில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரமுகர்களின் கட்சி தாவல்கள், பிரமுகர்களின் அறிக்கைகள் என தமிழக அரசியல் வட்டாரமே பரபரப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி ஒருவர் ஏற்கனவே திமுகவில் இணைந்த நிலையில் மற்றோரு அதிமுக பிரமுகரும்  திமுகவில் இணைகிறார்.

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்தவர் லட்சுமணன். கடந்த ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டிருந்த அதிமுக மாவட்ட செயலாளர் பதவியை கட்சி தலைமை பறித்தது. அதை தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்த லட்சுமணன் தற்போது திமுகவில் இணைய தீர்மானித்துள்ளார்.

இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
உடுமலை சங்கர் கொலை வழக்கு; உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு!