ராஜராஜ சோழன் சர்ச்சை: இயக்குனர் ரஞ்சித் மீது மேலும் ஒரு வழக்கு!

Last Modified செவ்வாய், 11 ஜூன் 2019 (20:48 IST)
சோழ மன்னன் ராஜராஜ சோழர் குறித்து அவதூறாக பேசிய இயக்குனர் ரஞ்சித் மீது ஏற்கனவே தஞ்சை அருகே உள்ள திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மயிலாடுதுறையிலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இயக்குனர் ரஞ்சித் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, 'தலித்துகளின் நிலங்கள் ராஜராஜசோழன் காலத்தில்தான் பறிக்கப்பட்டதாகவும், அந்த நிலங்கள் மீட்கப்பட தலித் அமைப்புகள் ஒன்றுசேர வேண்டும் என்று ஆவேசமாக பேசினார். மேலும் உலகமே போற்றும் ராஜராஜசோழனை ஒருமையிலும் அநாகரீகமான முறையிலும் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் தெரிவித்த ராஜராஜ சோழன் பற்றிய கருத்துக்காக பாஜக சார்பில் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ரஞ்சித் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இன்னும் ஒருசில நகரங்களிலும் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :