திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 1 ஜூன் 2019 (20:29 IST)

மோடி ஆட்சி பயமாக இருக்கிறது...பிரபல இயக்குநரால் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த சூடுகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தீஸ் என்பவர் கடந்த ஆண்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இன்று அவரது குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார் இயக்குநர் பா .ரஞ்சித். பின்னர் ஓசூர் அடுத்த மத்திகிரியில் சட்ட ஆலோசனை மையம் மற்றும் பாடசாலையில் உள்ள திறப்பு விழாவிலும் கலந்துகொண்டார்.
இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
தமிழக அரசு அறிவித்த மாதிரி நந்தீஸ் வீட்டுக்கு பட்டா வழங்கியுள்ளனர்.  அதேபோல் நந்தீஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தகுதிக்கேற்ற அரசு வேலை வழங்குவதாக கூறிய அரசு அதை விரைவில் வழங்க வேண்டும்.
 
தமிழகத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றிருந்தாலும் கூட சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது பற்றி முற்போக்கு அமைப்புகள் விவாதிக்க வேண்டும்.
 
மேலும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்றுள்ளது பயத்தை ஏற்படுத்தியுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.