திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 ஜூன் 2019 (18:27 IST)

உங்க படம் தோல்வின்னா தற்கொலை செய்வீங்களா? ரஞ்சித்துக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

நீட் தேர்வில் தோல்வியானதால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் குறித்து டுவீட் செய்த இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு, 'உங்க படம் தோல்வி அடைந்தால் நீங்கள் தற்கொலையா செய்து கொள்வீர்கள்? என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவிரக்தி அடைந்த ரிதுஸ்ரீ மற்றும் வைசியா ஆகிய இரண்டு மாணவிகள் நேற்று தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து நீட் தேர்வுக்கு எதிரான குரல் தமிழகத்தில் மேலும் வலுத்துள்ளது. 
 
இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில், ''நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது ரிதுஶ்ரீ, வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு  நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்! என்று பதிவு செய்திருந்தார்.
 
ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் பதில் கேள்வி எழுப்பியுள்ளார். 'நீங்கள் இயக்கும் திரைப்படம் தோல்வியடைந்தால் நீங்கள் தற்கொலையா செய்து கொள்ள நினைப்பீர்கள்? அடுத்து நல்ல படம் எடுக்க வேண்டும் என்றுதானே நினைப்பீர்கள்? அல்லது படங்களை தடை செய்ய போராட்டம் நடத்துவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
காயத்ரியின் இந்த கேள்விக்கு நெட்டிசன்கள் ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர்.