புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2019 (16:30 IST)

ச்சை! பொம்பள மாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்க மாடீங்களாடா? கஸ்தூரி ஆவேசம்!

சிலைகளோடு ஆபாசமாக புகைப்படம் எடுத்து சர்ச்சையான முஜிபுர் ரஹ்மான் கடுமையாக திட்டியுள்ளார் நடிகை கஸ்தூரி.

 
திருச்சி செங்குளம் பகுதியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கே பல விதமான புகைப்படங்கள் எடுத்து கொண்டவர், அங்குள்ள பெண் சிலைகளோடு கட்டி பிடிப்பது போல் ஆபாசமான போஸ் கொடுத்து படம் பிடித்திருக்கிறார். 
 
இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் அவர் பகிர்ந்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ஒரு நபர் கொடுத்த புகாரை அடிப்படையாக கொண்டு போலீஸார் முஜிபுர் ரஹ்மான் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. 
இந்நிலையில் நடிகை கஸ்தூரி இது குறித்து தனது டிடிவ்ட்டர் பக்கத்தில், பிடிச்சு ஜெயில்லே போட்டுட்டாங்க. ரம்ஜான் கொண்டாடினானாம்! வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை!  பொம்பள மாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்க மாடீங்களாடா? முஜிபுர் ரஹ்மான்! எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்! என பதிவிட்டுள்ளார். 
 
அதோடு மற்றொரு டிவிட்டில் இளைய தலைமுறையினர் பெண்களை, கலையை, பிற மதங்களை மதித்து நடக்க வேண்டும். என்னவோ, மொத்தத்துல பெரிய கோவிலுக்குத்தான் டைம் சரியில்ல போல என பதிவிட்டுள்ளார். இந்த டிவிட் பிரபல நபர் ஒருவரை குறிப்பிடுவது போல உள்ளது...