செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஜூன் 2020 (12:16 IST)

நடைபாதையில் கிடந்த மர்ம பொருள்: ரேடியோ என கொண்டு சென்ற விசாயிக்கு நேர்ந்த கொடூரம்!

கோப்புப்படம்
சேலம் அருகே கீழே கிடந்த மர்மபொருள் வெடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தும்பல்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. விவசாயியான இவர் வழக்கம் போல தோட்டத்திற்கு சென்று திரும்பியபோது நடைபாதையில் ரேடியோ போன்ற சாதனம் கிடந்துள்ளது, அதை வீட்டிற்கு கொண்டு வந்தவர் அதை இயக்க மின்சார இணைப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் திடீரென பயங்கர சத்தத்துடன் அந்த மர்ம பொருள் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் விவசாயி மணி சம்பவ இடத்திலேயே பலியானார். அவர்து பேத்தி உட்பட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

விவசாயி மணி வீட்டில் வெடித்த அந்த மர்ம பொருள் என்ன என்பது குறித்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். முதற்கட்ட சோதனையில் வெடித்து சிதறியது வெடிபொருள் அல்ல என்றும் மேற்கொண்டு தகவல்கள் ஆய்வுக்கு பிறகு தெரிய வரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். எனினும் அந்த பொருள் வெடித்த போது பயங்கரமான சத்தம் கேட்டதாக அருகிலிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.