இந்த நான்கு புள்ளிகளை இணைத்து பாருங்கள், விடை தெரியும்: அண்ணாமலை டுவிட்
இந்த நான்கு புள்ளிகளை இணைத்து பார்த்தால் மின்சார துறையில் நடந்துள்ள ஊழலுக்கு விடை தெரியும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை டுவிட் பதிவு செய்துள்ளார்
கடந்த சில நாட்களாக மின்சாரத்துறையில் நடந்த முறைகேடு குறித்து அண்ணாமலை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக மின்சாரம் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என்றும் 4 சதவீத கமிஷன் வழங்கப்பட்டதை அடுத்து 29 கோடிக்கு மேல் பணம் வழங்கப்பட்டு விட்டதாகவும் அண்ணாமலை ஆதாரத்துடன் தெரிவித்திருந்தார்
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது/ இந்தநிலையில் சற்றுமுன்னர் அண்ணாமலை அவர்கள் பதிவு செய்துள்ள ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
கோபாலபுரம், பிஜிஆர் எனர்ஜி, மின்சார அமைச்சகம், செந்தில் பாலாஜி. இந்தப் புள்ளிகளை இணைத்து பாருங்கள்... விடை எளிதில் புரியும் ! என பதிவு செய்துள்ளார்.