1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 அக்டோபர் 2021 (08:44 IST)

தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய அண்ணாமலை: என்ன காரணம்?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நன்றி கூறியுள்ளார் 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்களுக்கு கோவில்கள் திறக்கப்படாது என்றும் மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிபந்தனையை எதிர்த்து பாஜக கடந்த சில நாட்களுக்கு முன்னர் போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ்மாக் உட்பட அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் நிலையில் கோவில்கள் மட்டும் அடைந்திருப்பது ஏன் என்ற கேள்வியை பலர் எழுப்பினர் 
 
இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களில் திறக்க அனுமதி அளிப்பதாக உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கும் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தனது நன்றியை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்