1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 ஜூலை 2021 (12:51 IST)

கரூரில் அண்ணாமலை ஆதரவாளர் கைது: பெரும் பரபரப்பு

தமிழக பாஜக தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்ட அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இன்று கரூரில் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நேற்று அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் அதனை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கரூரில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் கொடுத்து கொண்டாடி கொண்டு இருந்ததை அடுத்து திடீரென காவல்துறையினர் வந்து கொண்டாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்தனர் 
 
இதனை அடுத்து கலெக்டரும் சம்பவ இடத்துக்கு வந்ததால் கலெக்டருக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில் அனுமதியின்றி பட்டாசு வெடித்த அண்ணாமலையின் ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் கரூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நேற்று பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டதை அடுத்து இன்று அவருடைய ஆதரவாளர்கள் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது