செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (19:11 IST)

நான் தவறு செய்யாத போது எதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்: அண்ணாமலை ஆவேசம்

Annamalai
தான் நடுநிலை பத்திரிகையாளர்களை அவமரியாதையாக பேசவில்லை என்றும் அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அண்ணாமலை ஆவேசமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பத்திரிகையாளர்களை அண்ணாமலை குரங்கு என கூறி அவமரியாதை செய்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் பத்திரிகையாளர்கள் இன்று அண்ணாமலையை மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்
 
ஆனால் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கட்சி சார்பாக நடத்தப்படும் பத்திரிகைகளுக்கு தான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை என்றும் குறிப்பாக சன் டிவி முரசொலி எல்லாம் நான் பத்திரிக்கை ஆகவே நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தான் தவறு செய்யாத போது எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசமாக கூறிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க முடியாது என்று மன்னிப்பு கேட்பது என்ற ரத்தத்திலேயே இல்லை என்றும் கூறினார் 
 
90% பத்திரிகையாளர்கள் நேர்மையாகவும் நடுநிலையாகவும் இருக்கின்றனர் என்றும் ஒரு சிலர் கட்சி சார்ந்த பத்திரிகை வைத்துக்கொண்டு அவதூறு பரப்பி வருவதாகவும் அவர்களுக்கு எல்லாம் நான் மரியாதை கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran