ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 29 அக்டோபர் 2022 (17:43 IST)

கோவையில் அறிவிக்கப்பட்ட பந்த் தற்காலிகமாக ஒத்திவைப்பு - பாஜக அறிவிப்பு

கோவையில் அறிவிக்கப்பட்ட பந்த் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது.


கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்த நிலையில் அந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பதும் இது ஒரு தீவிரவாத செயலின் பின்னணியா என்பது குறித்து  என்.ஐ.ஏ தமிழக காவல்துறை ஒத்துழைப்புடன் விசாரணை செய்து வருகிறது.

இந்த நிலையில் கோவையில் மக்கள் பதட்டமாக இருக்கின்றனர் என்றும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்டோபர் 31ஆம் தேதி பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் இந்த போராட்டத்தை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஆர் வெங்கடேஷ் என்பவர்  நேற்று மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், கோவையில் அறிவிக்கப்பட்ட பந்த் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பாஜக  அறிவித்துள்ளதாவது:

தற்போதைய பொருளாதார நிலையைக் கணக்கி கொண்டு கோவையில்கடையடைப்பை  மறுபரிசீலனை செய்யும்பபடி தொழில்பதிபர்கள், தொழில்முனைவோர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த பந்த் தற்காலிகமாக   ஒத்திவைப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 மேலும், வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை கோவைக்கு பயணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது கோட்டை ஈஸ்வரன் அருளால். @BJP4TamilNaduகோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நாளை மறுநாள், அக்டோபர் 31ஆம் தேதி, நம்மைக் காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன் என்று டுவீட் பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj