வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 டிசம்பர் 2023 (08:14 IST)

அடுத்த 3 மாதத்தில் விளைவுகளை உதயநிதி சந்திப்பார்: அண்ணாமலை

உங்கள் அப்பன் வீட்டு சொத்தா என்று உதயநிதி கூறியதற்கு அடுத்த மூன்று மாதத்தில் அவர் விளைவுகளை சந்திப்பார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

சனாதனத்தை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு மூன்று மாதத்தில் விளைவுகள் கிடைத்துள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை வெளியேற்ற நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.

சனாதன கொள்கைக்கு எதிராக இருக்கும் திமுக, இந்தியா கூட்டணியில் இருக்க தகுதியற்றது என்ன நிதீஷ் குமார் நினைக்கிறார் என அண்ணாமலை தெரிவித்தார்  

அதேபோல் உங்கள் அப்பன் வீட்டு சொத்தை நாங்கள் கேட்கவில்லை என உதயநிதி பேசியதற்கான விளைவு அடுத்த மூன்று மாதத்தில் அதாவது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.  

இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை வெளியேற்ற நிதிஷ்குமார் முடிவு செய்தாலும் திமுக வெளியேறாது. எவ்வளவு திட்டு வாங்கினாலும் அந்த கூட்டணியில் தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு உதயநிதி தரப்பிலிருந்து என்ன பதிலடி கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by Siva