வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 டிசம்பர் 2023 (07:45 IST)

உதயநிதி வாய்க்கொழுப்பெடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்: பொள்ளாச்சி ஜெயராமன்

உதயநிதி வாய்க்கொழுப்பெடுத்து பேசிக் கொண்டிருக்கிறார் என அதிமுக மூத்த தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்  பேசியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக மூத்தத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இயற்கை பேரிடர் காலத்தில் தமிழக மக்கள் நாதியற்றவர்களாக தவிக்கின்றனர். விரைவில் இந்த நிலை மாற வேண்டும். தமிழக மக்களை காப்பாற்ற நிதானமாக செயல்படக்கூடிய முதல்வராக எடப்படியார் பொறுப்பேற்க வேண்டும். அப்போதுதான் இந்த நிலைமை மாறும். உதயநிதி வாய்க்கொழுப்பு எடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய பேச்சு விரைவில் அவருக்கு சரியான பாடத்தை சொல்லிக் கொடுக்கும். மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய அவர், துடுக்குத்தனமாக பேசி சென்னையிலும் சேலத்திலும் இருந்து கொண்டு ஏதோ வெள்ளத்தில் நீந்தி மக்களின் கஷ்டங்களை நீக்குவது போல பேசுகிறார்.

ஏதோ வாயில் பேசுவது மட்டும் மக்களுக்கு தீர்வாகாது. நேரடியாக செயல்பட்டால் மட்டும் தான் மக்களுக்கு தீர்வாகும். அந்த செயல்பாடு எதுவும் உதயநிதியிடம் இல்லை.

Edited by Siva