வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 25 டிசம்பர் 2023 (07:03 IST)

இந்தியாவில் இருந்து திரும்பி மீண்டும் அணியில் இணைந்த விராட் கோலி!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே டிசம்பர் 26 ஆம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சென்றார்.

இந்நிலையில் தனிப்பட்ட காரணத்தினால் அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார். குடும்ப விஷயம் காரணமாக அவர் திரும்பியதாக சொல்லப்பட்டது. அவர் முதல் டெஸ்ட்டுக்கு முன்னர் அணியில் இணைவார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவர் இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்கா திரும்பி இந்திய அணியோடு இணைந்து பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.