வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (17:44 IST)

கமிஷன் சம்பாதிக்க திமுக கவுன்சிலர்கள் ஆலோசனை நடத்தினார்களா? அண்ணாமலை வெளியிட்ட ரகசியம்..!

கோவையில் கமிஷன் சம்பாதிக்க திமுக கவுன்சிலர்கள் ஆலோசனை நடத்தினார்கள் என  அண்ணாமலை வெளியிட்ட ரகசியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை மேலும் கூறியதாவது: 
 
கோவை மாநகராட்சிப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களிடம், கமிஷன் வசூலிப்பதற்கென தனிக் குழு ஒன்று அமைக்க வேண்டும் என்று, கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கலந்தாலோசித்த செய்தியை, இன்றைய நாளிதழில் படித்தேன். 
 
மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில், கோபாலபுர இளவரசரும், மாப்பிள்ளையும் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கும் பொழுது, நாம் ஏன் கமிஷன் மூலமாக 30 கோடி ரூபாய் சம்பாதிக்கக்கூடாது என்று, திமுக கவுன்சிலர்கள் ஆலோசனை நடத்தியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
 
திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுவதும், முறையாகப் பயன்படுத்தினாலே, பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறையும். அந்த நிதியில் ஊழல் செய்து பணம் சம்பாதித்து விட்டு, அதனைக் கேள்வி கேட்பவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதுதான் திமுகவினரின் பாரம்பரியம். 
 
யார் மரியாதைக்குரிய அப்பா வீட்டு காசில் கமிஷன் அடிக்க, திமுக கவுன்சிலர்கள் குழு அமைத்திருக்கிறார்கள் என்பதை, தமிழக முதல்வர் தெளிவுபடுத்துவாரா?
 
 
Edited by Siva