வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 மார்ச் 2023 (14:15 IST)

நில அளவர் தேர்வில் ஒரே மையத்திலிருந்து 700 பேர் தேர்ச்சி: தேர்வர்கள் அதிர்ச்சி..!

tnpsc
நில அளவர் தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி அடைந்தது குறித்து தேர்வர்கள் கேள்வி எழுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழக அரசின் நில அளவை துறையில் ஆயிரம் காலியிடங்கள் இருப்பதை எடுத்து அதனை நிரப்ப கடந்த நவம்பர் மாதம் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் ஒரே மையத்தைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதிலும் ஒரு  குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் இருந்து தேர்வு எழுதியவக்ரள் தான் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் கேட்டபோது விசாரணை நடத்தி வருவதாகவும் அதற்கான காரணம் என்பது என்ன என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார் 
 
Edited by Siva