புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (07:47 IST)

என்ன ஆச்சு அண்ணாமலை-செந்தில்குமார் நேரடி விவாதம்: பரபரப்பு தகவல்

என்ன ஆச்சு அண்ணாமலை-செந்தில்குமார் நேரடி விவாதம்
திமுகவைச் சேர்ந்த செந்தில்குமார் அவர்களும் சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்களும் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் விவாதம் செய்ய இருப்பதாக ஒருவருக்கொருவர் சவால் விட்டனர் 
 
இந்த விவாத தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் தொலைக்காட்சியின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று இந்த விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய முன்வந்தது. இதற்கான தேதிகளை செந்தில்குமார் மற்றும் அண்ணாமலை ஆகியோர் தனித்தனியாக கொடுத்ததாகவும், அண்ணாமலை கொடுத்த தேதியை செந்தில்குமார் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் செந்தில்குமார் கொடுத்த தேதிகளில் அண்ணாமலை ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது 
 
எனவே இந்த விவாதம் கிட்டத்தட்ட ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை முதல் செந்தில்குமார் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள சென்றுவிடுவார் என்பதால் மீண்டும் எப்போது இந்த விவாதத்தை நடத்துவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்