திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 5 ஜூலை 2023 (15:04 IST)

பொது சிவில் சட்டம் குறித்து அதிமுகவுக்கு புரிதல் இல்லை; அண்ணாமலை

பொது சிவில் சட்டம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை அதிமுக எதிர்க்கும் என இன்றைய மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 
 
ஏற்கனவே திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து உள்ள நிலையில் தற்போது அதிமுகவும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்ப்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விழுப்புரத்தில் கூறியபோது, ‘பொது சிவில் சட்டம் குறித்து அதிமுகவுக்கு புரிதல் இல்லை என்றும் அதனை புரிந்து கொண்டு அவர்கள் மாறுவார்கள் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 
 
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அதிமுக என்ன பதிலடி கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva