திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 5 ஜூலை 2023 (08:24 IST)

ஈபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்.. மதுரை மாநாடு குறித்து ஆலோசனை..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 
 
இந்த கூட்டத்தில் அதிமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்படும் என்றும் தற்போது ஒரு கோடியை 35 லட்சம் உறுப்பினர்கள் அதிமுகவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
உறுப்பினர் சேர்ப்பு பணிகள் முடிந்த பின்னர் நாடாளுமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் இன்றைய மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மேலும் வளரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தப்பட உள்ள நிலையில் இந்த மாநாடு குறித்த பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. 
 
அதேபோல் மேகதாது உவகாரம் உள்ளிட்ட பல்வேறு தமிழக பிரச்சனைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசுக்கு சில கோரிக்கைகள் வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva