ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2023 (11:31 IST)

பொது சிவில் சட்டம்: மத அமைப்புகள், பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: - இந்திய சட்ட ஆணையம்

பொது சிவில் சட்டத்தை இயற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இது குறித்த கருத்துக்களை மத அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என இந்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது என்பதும் அவ்வப்போது பிரதமர் மோடி இது குறித்து பேசி வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக அரசு தீவிரம் காட்டினாலும் எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. 
 
இந்த நிலையில் இந்த சட்டம் குறித்து மத அமைப்புகள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகள் கருத்து தெரிவிக்க ஜூலை 14ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran