செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2022 (09:27 IST)

அண்ணாமலை – உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு… முதல்வர் குறித்து நலம் விசாரிப்பு!

தமிழக அரசியலில் கடும் போட்டியாளர்களாக கருதப்படும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்துக் கொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது.

எம்.ஜி.ஆர் காலக்கட்டத்தில் நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவர் ஐசரி கணேசன்.   இவர் கடந்த 1970 ஆம் ஆண்டு வெளியான படம் எங்க மாமா என்ற படத்தின் மூலம் அறிமுகமனார். அதன்பின்னர் பல படங்களில் நடித்திருக்கிறார். அவரின் மகன் ஐசரி கணேஷும் திரைத்துறையில் இப்போது தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், ஐசரி கணேசனின் துணைவியாரும், கே.கணேஷின் தாயாருமான  திருமதி. புஷ்பா ஐசரி கணேசன் நேற்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது75 ஆகும். சினிமாத்துறையினர், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அப்போது நடிகரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக பாஜக தலைவர் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் அங்கு சென்றதால் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் மரியாதை நிமித்தமாக பேசிக்கொண்டனர். அந்த உரையாடலில் அண்ணாமலை கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் உடல்நிலை குறித்து உதயநிதியிடம் நலம் விசாரித்துள்ளார்.