வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 14 ஜூலை 2022 (18:49 IST)

தமிழக அரசுக்கு ரூ.1 கோடி நிதியளித்த அண்ணாமலை: ஏன் தெரியுமா?

annamalai
காமராஜர் 120வது பிறந்த நாளை ஒட்டி அவரது நினைவிடத்தை சீரமைக்க தமிழக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி தருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
காமராஜர் நினைவிடம் கவனிப்பாரற்று இருக்கும் நிலையில் சென்னை மெரினா கடற்கரை உள்ள தலைவர்களின் நினைவிடத்தை போல காமராஜர் நினைவிடத்தை சீர்படுத்தி ஒளி ஒலி கண்காட்சி அமைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரிடம் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்
 
இதற்காக தமிழக பாஜக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி முதலமைச்சரிடம் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றும் அப்படி அவர்கள் சீரமைக்க விட்டால் அதை சீரமைக்கவும் பராமரிக்கவும் தமிழக அரசு அனுமதி தந்தால் நாங்கள் அதை முக்கிய சுற்றுலா தளமாக மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்