1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ready to join in bjp ops says annamalai

ஓபிஎஸ்-க்காக பாஜக கதவு திறந்தே உள்ளது: அண்ணாமலை

annamalai ops
ஓபிஎஸ் அவர்களுக்காக பாஜகவின் கதவு திறந்தே இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஓபிஎஸ் பாஜகவில் இணைந்தால் அவரை சேர்த்துக் கொள்வீர்களா என செய்தியாளர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கேள்வி எழுப்பினர்
 
இந்த கேள்விக்கு பதில் கூறிய அண்ணாமலை பாஜகவின் கதவு திறந்தே இருக்கும் என்றும்,  எங்களுக்கு யார் மீதும் விருப்பு வெறுப்பு கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து ஓபிஎஸ் பாஜகவில் இணைந்தால் சேர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாக அண்ணாமலை மறைமுகமாக கூறியுள்ளதாக கருதப்படுகிறது.
 
 
அடுத்த கட்டுரையில்
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய கமல் திட்டம்!