1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 18 ஜனவரி 2023 (17:43 IST)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் நடத்தும் அதிகாரி யார்?

election
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என சற்று முன்னர் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் சற்று முன்னர் இந்த தேர்தலை நடத்தும் அதிகாரி குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் ஜனவரி 31ஆம் தேதி மனு தாக்கல் நடைபெறும் என்றும் மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் பிப்ரவரி 7 என்றும் மனுக்கள் பரிசீலனை பிப்ரவரி 8 மற்றும் மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 10 என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் இரண்டாம் தேதி எண்ணப்படும். இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி  நியமித்துள்ளார். அதன்படி நகராட்சி ஆணையர் சிவக்குமார் என்பவர் தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ஈரோடு மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva