1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (16:07 IST)

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

Election Commission
மூன்று மாநிலங்களில் சட்டசபட்ட தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலைகள் தமிழ்நாடு உள்பட நான்கு மாநிலங்களில் உள்ள காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு சற்று முன் வழியாகி உள்ளது. 
 
திரிபுராவில் முகவரி 16ம் தேதி, மேகாலயா, நாகாலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களில் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஈரோடு கிழக்கு உள்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழ்நாட்டில் ஒரு தொகுதி, மகாராஷ்டிராவில் இரண்டு தொகுதி, லட்சத்தீவு மக்களவைத் தொகுதி ஆகியவற்றில் 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த தமிழ் மகன் ஈவேரா சமீபத்தில் காலமானதை அடுத்து இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran