தொடர்புடைய செய்திகள்
- அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முதல்வர் பதிலளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்..!
- ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: துபாய் செல்லும் தனிப்படை போலீஸ்.. என்ன காரணம்?
- சென்னை அண்ணா பல்கலை உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்..!
- வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்!
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை: 3 தனிப்படைகள் அமைப்பு
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதவி ஆணையர் பாரதிதாசன், கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றத்தில் சம்பந்தப்பட்ட நபர் யார் என்பது குறித்தான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மாணவி அளித்த தகவலின் அடிப்படையில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ், விசாரணையில் உள்ள நபரை மாணவி உறுதி செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
மேலும் சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சிகள் வேலை செய்யவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மாணவி வன்கொடுமை சம்பவத்தை விசாரணைக் குழு அண்ணா பல்கலைக்கழகம் அமைத்து விசாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
