வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 அக்டோபர் 2024 (18:41 IST)

சென்னை அண்ணா பல்கலை உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்..!

bomb threat
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட மூன்று இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது இது 14-ஆவது முறை என கூறப்படுகிறது.
 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைத் தவிர, கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனை மற்றும் முகப்பேரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், ஜே.ஜே. நகர் போலீசார் தனியார் பள்ளியில் சோதனை நடத்தியதில், அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதேபோல, தனியார் மருத்துவமனையிலும் அண்ணா பல்கலைக்கழகத்திலும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களும் போலியானவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தவர்கள் யார் என்பதை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று மதுரையில் ஆறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்று சென்னையின் மூன்று முக்கிய இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரிய அதிர்ச்சியாகியுள்ளது.
 
 
Edited by Siva