திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2024 (18:29 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: துபாய் செல்லும் தனிப்படை போலீஸ்.. என்ன காரணம்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணைக்காக தனிப்படை போலீசார் துபாய் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த சில மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சம்போ செந்தில் என்பவர் துபாயில் தலைமறைவாகியுள்ளார்.

இதனை அடுத்து, அவர் துபாயில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் துபாய் சென்று அவரை பிடிக்கத் தயாராக தனிப்படை போலீசார் துபாய் செல்ல உள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் விமானம் மூலம் தனிப்படையினர் துபாய் செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது சுமார் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 200 சாட்சிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் ரவுடி சாம்போ செந்தில்  பிடிக்கப்பட்டால், இந்த வழக்கில் மேலும் சில திருப்பங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால், தனிப்படை போலீசார் துபாய் செல்ல உள்ளனர்.

Edited by Mahendran