1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜூன் 2018 (12:43 IST)

அண்ணா பல்கலைக்கழகம்: பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்கள் வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகம்: பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்கள் வெளியீடு
அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் உ‌ள்ள பொறியியல் கல்லூரிக‌ளி‌ல், அரசு ஒதுக்கீட்டில் இருக்கும் காலி இடங்களை நிரப்ப மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதற்கான கலந்தாய்வு விண்ணப்பங்களை மே 3ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்தனர்.
 
இந்நிலையில், பொறியியல் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண்களை இன்று அண்ணா பல்கழைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்: பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்கள் வெளியீடு
 
இதற்கான நிகழ்ச்சி அண்ணா பல்கழைக்கழகத்தில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் சூரப்பா, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.