வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 24 மே 2018 (18:05 IST)

ஸ்டெர்லைட் விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் தூப்பாக்கி சூடு நடந்தது. இதன் காரணமாக மே 25,26,28ம் தேதிகளில் நடக்கவிருந்த அண்ணா பலகலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதனால் அங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும் இணையத்தள சேவைகள முடக்கப்பட்டுள்ளது. அதனால் பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியமால் மாணவர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி அண்ணா பல்கலைக்கழகம் வரும் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகளை ஜுன் 5ம் தேதி முதல் ஜுன் 7ம் தேதி ஒத்திவைத்துள்ளது.