தொடர்புடைய செய்திகள்
- நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவ மாணவிகள் ஆர்வம்..!
- நிறுத்தி வைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: அண்ணா பல்கலை!
- அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு! மாணவ மாணவிகள் ஆர்வம்..!
- போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம்! – தலைமறைவான நிர்வாகி அதிரடி கைது!
- வடிவேலு உள்பட பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்: முக்கிய குற்றவாளி தலைமறைவு..!
முதுநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு: அண்ணா பல்கலை அறிவிப்பு..!
அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுநிலை மாணவர்கள் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முதலாம் ஆண்டு தேர்வுகளை எழுதிய நிலையில் அந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எம்சிஏ இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதினர்.
இந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் முனைவர் படிப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை http://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் தங்கள் செமஸ்டர் தேர்வு முடிவுகளை மிகுந்த ஆர்வத்துடன் இணையதளத்தில் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
