வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (14:57 IST)

நிறுத்தி வைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: அண்ணா பல்கலை!

Anna university
அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் ஒரு சில காரணங்களால் ஒரு சில கல்லூரிகளின் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் தற்போது அந்த முடிவுகள் இன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விடைத்தாள் திருத்துவது மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவது தொடர்பாக சில கல்வி நிறுவனங்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்திருந்தது. 
 
இந்த நிலையில் சில கல்லூரிகளுக்கு மட்டும் நிறுத்திவைக்கப்பட்ட, அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியாகும் என செய்திகள் கூறுகின்றன.
 
20 கல்லூரிகள் மீது பல்கலை. நிர்வாகம் எடுத்த நடவடிக்கை, மாணவர்களை பாதிக்கக் கூடாது என்பதால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran