வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2023 (19:24 IST)

நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவ மாணவிகள் ஆர்வம்..!

நீட் முதுநிலை தேர்வு மார்ச் ஐந்தாம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
நாடு முழுவதும் 271 நகரங்களில் 600க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நீட் முதுநிலை தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வை தமிழகத்தில் மட்டும் 25000 மாணவ மாணவிகள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அவர்கள் தனது சமூக வலைதளத்தை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நீட் முதுநிலை தேர்வு முடிவுகளை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
 
Edited by Siva