வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 ஏப்ரல் 2021 (00:32 IST)

அண்ணா பல்கலைக்கழக இறுதித் தேர்வு ஒத்திவைப்பு

எனவே மக்களை இத் தொற்றிலிருந்து காக்க மத்திர அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தமிழ்நாடு. கர்நாடகம், தெலுங்கான, டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில்,  இன்று தமிழகத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சூழலில் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழகத்தின் இறுதித் தேர்வுகளை சென்னை ஐஐடி ஒத்திவைத்துள்ளது.  இதேபோல் வரும் மே மாதம் 3 ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக் கழகமும் ஒத்தி வைத்துள்ளது.

இதுகுறித்த மறுதேர்வு அறிவிப்புகள் கொரொனா தொற்று பாதிப்பு குறைந்த பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.