1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (10:04 IST)

புத்தத்தை பார்த்தும், இணையத்தில் தேடியும்... அண்ணா பல்கலைக்கழகம் சூப்பரோ சூப்பர்!!

புத்தத்தை பார்த்தும், இணையத்தில் தேடியும்... அண்ணா பல்கலைக்கழகம் சூப்பரோ சூப்பர்!!
அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டும் ரத்து செய்யப்பட்டும் வருகிறது. மேலும் இனி சில மாதங்களுக்கு ஆன்லைனில் தான் பாடங்கள் நடத்தப்படும் என்றும் தேர்வுகளும் நடத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் தேர்வில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  
 
அதன்படி, அடுத்த மாதம் முதல் நடைபெறும் செமஸ்டர் தேர்வில் அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும், ஒருவரி கேள்வி பதில்போல் இல்லாமல், விரிவான வகையில் பதில் அளிக்கும் வகையில் கேள்வி கேட்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளதால் புத்தகத்தை பார்த்தும் இணையத்தில் தேடியும் பதில் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செம்ஸ்டர் மாணவர்கள் தவிர பிற ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.