செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (08:59 IST)

தேர்வு எழுதலையா? கவலை வேண்டாம்! – அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைன் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு அண்ணா பல்கலைகழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் அண்ணா பல்கலைகழகம் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தி வருகிறது. செப்டம்பர் 24 தொடங்கி 29ம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன. செப்டம்பர் 24ம் தேதி தொடங்கிய தேர்வில் 90 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 10 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனது. இதனால் அவர்களுக்கு ரிசல்ட் எப்படி வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைகழகம் 24ம் தேதி ஆன்லைன் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறியுள்ளது. மேலும் மற்ற நாட்களிலும் ஆன்லைன் தேர்வில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கலந்து கொள்ளாதவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என தெரிகிறது.