1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 13 ஜனவரி 2021 (13:31 IST)

பள்ளிக்கு வருவதும் வராததும் மாணவர்கள் விருப்பம் - தமிழக அரசு உத்தரவு!

பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
 
இந்தியாவில் கடந்த மார்ச் முதலாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவெடுத்துள்ளது. 
 
அந்தவகையில் வருகிற ஜன.19 முதல் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள தமிழக அரசு, 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. 
 
மேலும், பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம்  முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மாணவர்களை பள்ளிக்கு வருமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் விரும்பினால் வீட்டில் இருந்தபடியே பிள்ளைகள் படிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது