1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Anchor dd statement about tamilnadu farmers

மூணு வேளை சாப்பிடுறோம், ஆனால் ஒண்ணும் செய்ய முடியலையே. டிடி வேதனை

DD
தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்தை மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் உள்ளது.



 


இந்நிலையில் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போலவே விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கும் வழக்கம்போல் திரையுலகினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் தனது ஆதரவை வீடியோ செய்தி ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான டிடி என்ற திவ்யதரிஷினியும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார்

அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: “மூன்று வேளை சாப்பாடு சாப்பிடுகிறோம், ஆனால் ஒண்ணுமில்லா இவங்களுக்காக எதுவும் பண்ணமுடியலயே! தமிழக முதலமைச்சர் மற்றும் பிரதமர் அவர்களே விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
About Writer
sivalingam