செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 21 செப்டம்பர் 2022 (10:46 IST)

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தால் மாற்றம் வரும்: அன்புமணி ராமதாஸ்

Anbumani
ராகுல் காந்தியின் நடைபயணத்தால் நிச்சயம் இந்தியாவில் மாற்றம் வரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ராகுல்காந்தி சமீபத்தில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 1500 கிலோமீட்டர் நடை பயணத்தை தொடங்கினார். இந்த நடைபயணத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 
இந்த நிலையில் ராகுல் காந்தியின் நடை பயணம் குறித்து கருத்து தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘ராகுல்காந்தி நடைபெற்றதால் நிச்சயம் இந்தியாவில் மாற்றம் வரும் என்றும் மக்கள் ஆதரவு பெருகும் என்றும் அவர் தெரிவித்தார்
 
தர்மபுரி மாவட்டத்தில் நான் நடைபயணம் மேற்கொண்ட போது அந்த பகுதி மக்கள் தனக்கு மிகுந்த ஆதரவு கொடுத்ததாகவும் அதேபோல் நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தியால் மாற்றம் வரும் என்றும் அவர் தெரிவித்தார்