1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 21 செப்டம்பர் 2022 (07:49 IST)

பாத யாத்திரையை நிறுத்திவிட்டு திடீரென டெல்லி செல்லும் ராகுல் காந்தி: என்ன காரணம்?

Rahul
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி சமீபத்தில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான 1500 கிலோ மீட்டர் நடை பயணத்தை தொடங்கினார் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் நேற்று மூன்றாவது நாளாக கேரளாவில் பாதயாத்திரை சென்ற ராகுல் காந்தி திடீர் என காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாதயாத்திரையை ஒருநாள் நிறுத்திவிட்டு நாளை மறுநாள் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ராகுல்காந்தி பாதயாத்திரையை நிறுத்திவிட்டு நேற்று கொச்சியில் இருந்து அவசரமாக டெல்லி சென்றதாக காங்கிரஸ் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்
 
நாளை மறுநாள் ஒரு நாள் மட்டும் பாதயாத்திரை நிறுத்தப்படும் என்றும் அதன்பின் சனிக்கிழமை முதல் மீண்டும் பாதை யாத்திரை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.