செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 21 செப்டம்பர் 2022 (07:44 IST)

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்: ராகுல் காந்தி விலகியதால் மோதும் இரு தலைவர்கள்!

congress
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் தேர்தல் நடைபெற்றால் அக்டோபர் 19ஆம் தேதி வாக்கு எண்ணப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது என்பதைப் பார்த்தோம் 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி மட்டுமின்றி சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருமே போட்டியிட வாய்ப்பு இல்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளன. 
 
தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்திதான் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்
 
இந்த நிலையில் ராகுல்காந்தி போட்டியில் இருந்து கிட்டத்தட்ட விலகி விட்டதால் அசோக் கெலாட் மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. அசோக் கெலாட்டிற்கு சோனியா காந்தியின் ஆதரவு இருப்பதால் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 இந்த நிலையில் சோனியா காந்தியுடன் அவசர ஆலோசனை செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது