வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (12:20 IST)

என்.எல்.சி போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள்: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

என்எல்சி நிர்வாகத்திற்கு எதிராக சமீபத்தில் பாமக தலைவர் அன்புமணி போராட்டம் நடத்திய நிலையில் இந்த போராட்டம் திடீரென வன்முறையில் முடிந்தது என்பதும் இந்த போராட்டத்தின் போது அன்புமணி கைது செய்யப்பட்டார் என்பதையும் பார்த்தோம்,.
 
 இந்த நிலையில் என்எல்சி போராட்டத்தில் கைதாகி பாளையங்கோட்டையில் சிறையில் உள்ள தொண்டர்களை பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘எங்கள் போராட்டத்தின் கூட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்தன் காரணமாகத்தான் அசம்பாவிதம் நடந்து உள்ளது என்று தெரிவித்தார். 
 
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக 58 பேர் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். தூத்துக்குடியை போல் வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்து என்எல்சி செயல்பட்டு கொள்ளட்டும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran